ஆத்தூர்அரசுபேருந்துதீடீர்பிரேக்பின்னால்வந்தவேன் மோதிவிபத்து

69பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனர் ஆத்தூர் புறவழிச்சாலையில் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி செல்வதற்காக நேற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் ஆத்தூர் செல்ல வேண்டும் என ௯றவே உடனடியாக பேருந்து ஓட்டுநர் அலட்சியப் போக்கோடு பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த சுற்றுலா வேன் அரசுப் பேருந்து பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்த்து அதிர்ஷ்டவசமாக பேருந்து மற்றும் வேனில் இருந்தவர்கள் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி