தவெக மாவட்ட செயலாளருக்கு தொண்டர்கள் வழங்கிய வரவேற்பு
தவெக ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக மலர்விழி நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு அளிக்கும் விதமாக சின்னகீரமங்கலத்தில் இருந்து திருவாடானை வரை இரண்டு சக்கர வாகனத்தில் கொடிகளை கட்டியும், கொடி கம்புகளை சுழற்றியவாறும் தவெகவினர் இரண்டு சக்கர வாகனத்தில் வலம் வந்தனர். இரண்டு சக்கர வாகனத்தில் வந்த தொண்டர்கள் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி வந்ததால் சக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்