திருவாடானை தனியார் மஹாலில் துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை மருத்து முகாம் நடந்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் PMR தனியார் மஹாலில் திமுக இளைஞர் அணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பான முறையில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் ஆகியவை திமுக ஒன்றியம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரான முத்துமனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தார். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகளும் வழங்கப்பட்டன. குறிப்பாக, கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.