ராமநாதபுரம்: தீயணைப்பு நிலையத்திற்கு செல்லும் சாலை பழுது

64பார்த்தது
திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு செல்லும் சாலை பழுதால் அவசர காலத்தில் உரிய நேரத்துக்கு செல்ல முடியவில்லை என சொல்லப்படுகிறது. 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னக்கீரை மங்கலத்தில் செந்தினி செல்லும் சாலையில் பிரிவு சாலை சுமார் 200 மீட்டர் தூரத்தில் தீயணைப்பு மீட்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்ட இந்த நிலையத்திற்கு யூனியன் நிதியில் இருந்து தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அது தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது ஆங்காங்கே சாலை முற்றிலும் சேதமடைந்து மண்சாலையாக மாறிவிட்டது. இதனால் அவசர காலங்களில் அவசர ஊர்தியை எடுத்து செல்வதில் சாலை மோசமாக இருப்பதால் பாதிப்பிற்குள்ளாகும் இடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல இயலாத நிலையும் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். 

இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி