பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

74பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானைஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்  இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவருக்கு ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், காலை வரை என்று முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஜாக்டோ ஜியோ மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என நூற்றுக்கணக்கான ஒரு கலந்து கொண்டார்கள். மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியோடு வாக்குறுதி கொடுத்ததை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும் ஏற்கனவே ஓய்வூதியம் பற்றி கடந்த ஆட்சியாளர்கள் குழு அமைத்ததால் எவ்வித முன்னேற்றமும் இல்லை,   இந்நிலையில் இந்த அரசும் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்திருட்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தனர். ஆர்எஸ் மங்கலத்தில் இருந்து வந்திருந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்களது நான்கு சக்கர வாகனத்தை அரசு மருத்துவமனை முன்பாக நிறுத்தி இறங்கினர் அதனால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி