தொண்டியில் அங்கன்வாடிமையக் கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

57பார்த்தது
தொண்டியில் சட்டமன்ற உறுப்பினரின் தாத்தா காலத்தில் கட்டிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டி பேரூராட்சி 5வது வார்டு பகுதியில், அங்கன்வாடி மையம் ஒன்று மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்துள்ளது. இந்தக் கட்டிடம் கடந்த 1978ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 24ஆம் தேதி, அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த கரியமாணிக்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் 13,000 ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், தற்போது மிகவும் சிதிலமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான கருமாணிக்கத்தின் தாத்தாவே கரியமாணிக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பழமையான கட்டிடத்தில் குழந்தைகள் படிப்பது பாதுகாப்பற்றது என்று கருதப்பட்டதால், தற்போது அங்கன்வாடி மையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. குழந்தைகளின் நலன் கருதி, இந்தப் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி