திருவாடானை தனியார் மஹாலில் திமுக மதிய ஒன்றியம் சார்பில் துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கிழக்குத் தெருவில் உள்ள பிஎம்ஆர் தனியார் மஹாலில் திருவாடானை திமுக மத்திய ஒன்றியம் மற்றும் தொண்டி ஏவிகே மருத்துவமனை இணைந்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். திமுக நிர்வாகிகள், மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். முகாமில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இன்று மாலை வரை நடந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுச் சென்றார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திமுக நகரச் செயலாளர் பாலா செய்திருந்தார்.