திருவாடானை அருகே அதிவிமர்சையாக நடைபெற்ற கோலப் போட்டி.
தண்ணீர் வரைந்து இருந்தது கோலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கரையைகோட்டை அருள்மிகு ஸ்ரீ நல்லாண்டியம்மன் திருக்கோவில் 21ஆம் ஆண்டு மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கோலப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டார்கள். கோலம் போட்டிக்கு தேசம் மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டது.
இப்போட்டியில் ஆர்வமுடன் கோலத்தை பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டனர். இதில் ஏராளமான கோலங்கள் பெண்கள் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இவற்றில் முற்றிலும் வித்தியாசமாக ஒருவர் தாம்பூலர் தட்டில் தண்ணீர் நிரப்பி அதில் விநாயகர் உருவத்தை கோலமாக தண்ணீரில் வரைந்திருந்தார் அது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆக்கியது தண்ணீரில் கோலம் வரைவது மிகவும் கடினமான நிலையில், மிகவும் பொறுமையாக தண்ணீரில் உருவத்தை வரைந்துள்ளார். தண்ணீரில் வரைந்து இருந்த கோலம் கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் led டிவி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது