ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து கள்ளிக்குடி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தடம் எண் 19 அரசு பேருந்து அடிக்கடி பழுதாவது வாடிக்கை ஆகிவிட்டது.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பழுதாகுவதும் அதை சரி செய்வதுமாக இருந்து வந்த நிலையில்,
இன்று காலை பயணிகள், மாணவர்கள் ஏரி அமர்ந்த நிலையில் பிரேக் ஃபெயிலியர் என சொல்லப்படுகிறது.
ஓட்டுனர் இரவு பேருந்து நிறுத்தும் பொழுது அதற்குரிய ஆவணத்தில் எழுதி வைத்ததாகவும் காலையில் சரி செய்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து எடுத்த பொழுது பேருந்து பிரேக் ஃபெயிலியர் ஆனது என பயணிகள், மாணவர்கள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினார்.
எட்டு மணிக்கி செல்ல வேண்டிய அரச பேருந்து நேரத்துக்கு செல்லாததால் மாற்று பேருந்து எட்டு 34 மணிக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பயணிகளை அனுப்பி வைத்தனர். இதனால் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்தது அடிக்கடி பழுதாகும் அரச பேருந்திற்கு மாற்ற பேருந்து வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது