திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் தலைமையில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை அலுவலக ஊழியர்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் துறை சங்கத்தின் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டாச்சியர் அமர்நாத் தலைமையில், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் வட்டத் தலைவர் அமுதன் முன்னிலையில் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் கணேசன் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்
தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலகங்களில் அதிகப்படியான பணிச்சுமை உள்ளதால், அதனை குறைக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திருவாடானை வட்டத்தைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.