திருவாடானை அருகே அருள்மிகு ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம்,
திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முதல் கால யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, தீப ஆராதனை அதனை தொடர்ந்து யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இன்று சாலை 2ம், கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து. கடம் புறப்பாடு அதனை தொடர்ந்து கடங்களில் இருந்த புனித நீர் கோயில் கும்பத்தில் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்