திருவாடானை: தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு அதிகாரிகள் தொந்தரவு

71பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடை கிராமம் உள்ளது. இது கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையால் ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு உள்ளது. இந்த காலனி குடியிருப்பு அடுத்தது போல் உள்ள தனிநபர் தனக்கு பாதை இல்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்து பாதை ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் தாசில்தார் அமர்நாத் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பாதை திறந்து விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாதையில் மேலும் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி தாலுகா அலுவலக வருவாய் ஆய்வாளர் மற்றும் நில அளவையர் இடத்தை அளவீடு செய்ய இன்று வந்துள்ளனர். அதற்கு அப்பகுதி மக்கள் இந்த இடம் ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து ஒதுக்கப்பட்ட இடத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் வராமல் நீங்கள் வருவது தவறு என வாக்குவாதம் செய்தனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் பாதியிலேயே அளவீடு செய்வதை நிறுத்தி சென்றனர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தொடர்ந்து தாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பதால் அதிகாரிகள் தொந்தரவு செய்து வருகின்றனர் என்றும் தவறான முறையில் பெறப்பட்ட உத்தரவை வைத்து தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும், அளவீடு செய்ய வரும் அதிகாரிகளும் எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் வந்து தொந்தரவு செய்வதாக கவலை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி