தமிழகத்தில் 12, 11, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. இதன் காரணமாக வரும் இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்ய வேண்டாம் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி முடிவடைகிறது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதியும் முடிவடைகிறது.