தமிழ் நடிகை சில்க் ஸ்மிதா இறந்து சுமார் 30 ஆண்டுகளாகியும் அவரது மரணத்தில் இருக்கும் மர்மத்திற்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், சில்க்கை அவரது உதவியாளர் ராதாகிருஷ்ணன் கொலை செய்துவிட்டு சொத்துகளை அபகரித்து விட்டதாக சில்கின் சகோதரர் நாக வரபிரசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். ராதாகிருஷ்ணன் எங்கே இருக்கிறார் என அறிந்தால் வழக்குத் தொடுப்பேன் என்றும் சில்கின் சகோதரர் கூறியுள்ளார்.