மகாராஷ்டிராவில் உள்ள புனே, தேகான் கிராமத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவமானது நிகழ்ந்துள்ளது. அந்த தேகான் கிராமத்தில் சிறுத்தையானது, வீட்டின் உரிமையாளரின் முன்னே அவரின் வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற காட்சியானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுத்தையானது எந்தவித சத்தமும் இல்லாமல், நாயின் (Dog) அருகில் வந்து வேகமாகக் கழுத்தைக் கவ்வியபடி தூக்கிச் சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.