கர்நாடக MLAக்கள் ஹனி ட்ராப் மூலம் அழகில் வலையில் சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சட்டப்பேரவையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மொத்தமாக 48 MLA-க்கள் இளம் அழகிகள் வலையில் சிக்கியுள்ளதாகவும், அவர்களது வீடியோக்கள் CD-யில் இருப்பதாக அம்மாநில அமைச்சர் ராஜண்ணா பேசியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி பேதமின்றி பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளதால் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக MLA-க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.