அமெரிக்கா முழுவதும் டெஸ்லா கார்கள், கார் சேவை மையங்கள் சார்ஜிங் நிலையங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறு செய்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அரசு துறைகளில் ஆட்குறைப்பு போன்ற எலான் மஸ்க்கின் பல்வேறு யோசனையால் வேலை இழந்த பலர் டெஸ்லா நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களில் குதித்துள்ளனர்.