திருச்சி மதுபான கடைகளில் தமிழக முதல்வரின் போட்டோவை பாஜகவினர் ஒட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் பிஜேபி தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறை கட்டிட பகுதியில் வெளிப்புற சுவற்றில் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் துறையூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்களில் சாட்டையால் அண்ணாமலை அடித்துக் கொள்வது போன்று உள்ள அண்ணாமலையின் புகைப்படத்தை ஓட்டினர்.