காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 85 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று தெரிகிறது. ஹமாஸ் பணய கைதிகளை விடுவிக்க மறுப்பதாகச் சொல்லி இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென வான்வழித் தாக்குதலை ஆரம்பித்தது.