சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை போலீசார் தரதரவனை இழுத்துச் சென்றதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சண்முகம் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து சிபிஎம் - திமுக இடையே வெளிப்படையாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது சண்முகத்தை போலீசார் தரதரவனை இழுத்துச் சென்றனர். மேலும், அவரை போலீசார் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அவர் தனது X தளத்திலும் பதிவிட்டுள்ளார்.