கர்நாடகா: அரசு பஸ் மோதியதில் பெண் உடல் நசுங்கி உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. துமகுரு டவுன் ஹால் அருகே கடூரிலிருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த KSRTC பஸ் மஞ்சம்மா என்ற பெண் மீது மோதியது. அவர் நிலைகுழைந்து கீழே விழுந்த பின்னும் ஓட்டுநர் சதீஷ், பஸ்ஸை நிறுத்தாமல் சென்றதால், பின் சக்கரம் ஏறி மஞ்சம்மா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.