கர்நாடகா: போட்டோ ஷூட்டில் வண்ணப்புகை குண்டால் மணப்பெண் படுகாயமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் விக்கி மற்றும் பியாவின் திருமணம் பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், திருமணத்துக்கு முன் நடந்த போட்டோஷூட்டில் மணப்பெண்ணை மாப்பிள்ளை தூக்கிய போது எதிர்பாராதவிதமாக வண்ணப்புகை குண்டு ஒன்று பியாவின் உடலில் பட்டு வெடித்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.