இளைஞர் மாயம் - தந்தை போலீசில் புகார்
புதுக்கோட்டை மாவட்டம் கடையம்பட்டி கிராமம் நந்தவனம் தெருவைச் சேர்ந்தவர் சுப்பு மகன் விஸ்வநாதன்(வயது 22). தனியார் கல்லூரியில் உடற்கல்வி பயின்றுள்ளார். இந்நிலையில், வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்ற விஸ்வநாதன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சுப்பு அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.