புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் லெம்பலக்குடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடந்தது. இதற்கு ஆர்டிஓ ஐஸ்வர்யா தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, தனி அலுவலர் தன லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப்பதிவாளர் ஆறுமுகப்பெருமாள் வரவேற்றார். புதிய கிளையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், மக்கள் நலனை அறிந்து மக்களை தேடி செல்லும் அரசாக திமுக அரசு உள்ளது. மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க நீண்ட துாரம் செல்ல வேண்டாம். 200 முதல் 250 கார்டுகள் இருந்தால் அங்கு பகுதிநேர அங்காடி திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தில் மாவட்டத்தில் 200 பகுதிநேர கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஒலியமங்கலம், லெம்பலக்குடி, தேக்காட்டூர் ஆகிய ஊர்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக் கிளைகள் திறக்கப்படுகிறது.
இதன்மூலம் விவசாயிகள் தங்கள் சொந்த ஊரிலேயே வங்கிப்பணிகளை மேற்கொள்ளலாம் என்றார். ஊராட்சி தலைவர் பாலு, பிடிஓ வெங் கடேசன், தாசில்தார் புவியரசன், மாவட்ட திமுக விவசாயிகள் அணி துணை அமைப்பாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோட் டூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.