புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் பாலத்தின் அடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த பாலசுப்பிரமணியம், வெள்ளைச்சாமி, அருண், சிலம்பரசன், ஆனந்தன், பாலமுருகன் ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டு அட்டைகள், 300 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆறு பேரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.