புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் முல்லை நகரை சேர்ந்த முகமது ஹனிபா, திருமயத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திருமயம் கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் மோதியதில் முகமது ஹனிபாவுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டு திருமயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.