காரைக்கால் அடுத்த கோவில்பத்து பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோதண்டராம சுவாமி ஆலயத்தில் பங்குனி மாத ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. பிரம்மோற்சவ விழா முன்னிட்டு ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ ராமர் அவதார நாளான ஸ்ரீ கோதண்டராமர் உள்ளிட்ட உற்சவர் சுவாமிகளுக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், தேன், பழங்கள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.