காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ தெக்ஷணமுத்து மாரியம்மன், ஸ்ரீ நடன காளியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ படைபத்ரகாளியம்மன் ஆலய முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஏந்தி குலவை இட்டு கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். பின்னர் கரகாட்டம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரிகை ஏந்தியபடி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.