
காரைக்காலில் நள்ளிரவில் சுற்றித்திரிந்தவர் கைது
காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் பெசன்ட் நகர் பகுதியில் நள்ளிரவில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தார். போலீசார், ரோந்து வருவதை பார்த்ததும் அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.