காரைக்கால் - Karaikal

காரைக்கால்: போக்ஸோ வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..

காரைக்கால்: போக்ஸோ வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..

காரைக்காலில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு அதற்காக கைதானார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆறுமுகம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பிறகு அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து நவம்பர் 13ம் தேதி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வீடியோஸ்


புதுச்சேரி
Nov 16, 2024, 14:11 IST/புதுச்சேரி
புதுச்சேரி

புதுவையில் சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் அலுவலகம் திறப்பு

Nov 16, 2024, 14:11 IST
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைமை புரவலருமான தலைமை நீதியரசர் ஸ்ரீராம் அறிவுறுத்தல் படியும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசரும், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான நீதியரசர் சுந்தர் ஒப்புதலின்படி, புதுச்சேரி ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான நீதியரசர் சுந்தர் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் நீதியரசர் ஆஷா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாக பொறுப்பு நீதிபதியும் நீதியரசர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.