தஞ்சாவூர் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் கபூர். இவர் நேற்று (நவம்பர் 14) மதியம் நண்பர்களோடு கடலில் இறங்கி குளித்தார். அப்போழுது திடீரென்று எழுந்து வந்த ராட்சத அலை ஒன்று அவர்களை வாரி சுருட்டியது. இதில் நண்பர்கள் தப்பித்து கரை திரும்பிய நிலையில் அப்துல் கபூரை காணவில்லை. தகவலறிந்த போலீசார் மீனவர்களுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போழுது அப்துல் கபூர் பாறை இடுக்கிலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதனை அடுத்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.