காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பண்டித் ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி இந்திய வேளாண் பொருளாதார சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வருமானத்தினை இரட்டிப்பாக்கும் நோக்கில் வேளாண் ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்களை கொண்டு தேசிய அளவிலான கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கம் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் நிதி ஆயோக் உள்ளிட்ட உயர்நிலை அமைப்புகளால் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.