காரைக்கால் அடுத்த தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீ சிவலோகநாத சுவாமி தேவஸ்தான ஆலயத்தில் வள்ளி, தேவசேன, முருகப்பெருமான் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நேற்று இரவு நடைபெற்றது. வைதீக முறைப்படி நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.