காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தொகுதியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான கையுறைகள், கிருமி நாசினி புடவைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி. என். எஸ். ராஜசேகரன் வழங்கினார். துப்புரவு பணியாளர்கள் புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி. என். எஸ். ராஜசேகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.