காரைக்கால் மதர் தெரேசா மதர் செவிலியர் கல்லூரி வளாகத்தில் மழையின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் வகுப்பறை மற்றும் சுவர்களில் வருவதை சரி செய்யுமாறு புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சார்பாக கோரிக்கை வைத்தனர். உடனே இன்று அமைச்சர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சரி செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.