காரைக்கால் அடுத்து திருப்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபிராமியம்மன் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா 02ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்ரீமுருகன் - தெய்வானை, வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. முருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.