காரைக்கால் - Karaikal

காரைக்கால்: போக்ஸோ வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..

காரைக்கால்: போக்ஸோ வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..

காரைக்காலில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு அதற்காக கைதானார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆறுமுகம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பிறகு அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து நவம்பர் 13ம் தேதி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வீடியோஸ்


புதுச்சேரி
Nov 16, 2024, 13:11 IST/புதுச்சேரி
புதுச்சேரி

ஆழியூர் கிராமத்தில் ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

Nov 16, 2024, 13:11 IST
புதுச்சேரி அடுத்த ஆழியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ பள்ளையத்தம்மன் மற்றும் ஸ்ரீ பூரணி பொற்கலை உடனுறை ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, ஆகியவை நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை மூன்றாம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலயம், ஸ்ரீ பள்ளையத்தம்மன் ஆலயம், ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலயங்களில் உள்ள கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து கோவில் உற்சவர்களுக்கும் கலச நீர் ஊற்றப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தானம் தலைமைச் அர்ச்ணகர் சரவணன் சிவாச்சாரியார் மற்றும் கோவில் நிர்வாகிகள், ஆழியூர் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.