காரைக்காலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மீனவ கிராமத்தில் திடீரென்று சுனாமி ஏற்பட்டால் அங்கு வசிக்கும் மீனவ மக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை செயல் விளக்கம் செய்தனர். இதில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.