பெரம்பலூர்: குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

50பார்த்தது
பெரம்பலூர்: குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை நிலையங்களில் பரிசோதனை நடைபெற்றது. இதன் மூலம் மங்களமேடு உட்கோட்டம், குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் குன்னம் லாட்ஜில் பரிசோதனை செய்ததில் அரியலூரை சேர்ந்த செல்லக்கண்ணு (32) என்பவர் லாட்ஜில் வைத்திருந்த பெட்டியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்திருந்தார். போலீசார் செல்லக்கண்ணுவை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து மொத்தம் 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி