பெரம்பலூர்: காச நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

57பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பாலக்கரை பகுதியில் இன்று தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி சங்குப்பேட்டை வரை சென்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்ட காசநோய் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டு, பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை கோஷம் எழுப்பியவாறும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் (காசநோய்) நெடுஞ்செழியன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கலா, நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜா, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி