உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கார்த்திக் சுவாமி திருக்கோயிலுக்கு ஏராளமானோர் ஆன்மீக சுற்றுலா வந்து செல்கின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்திலேயே கடவுள் முருகனுக்கு உள்ள ஒரே கோயில் இதுவாகும். எல்லா முருகன் கோயில்களைப் போலவே இங்கும் பாரம்பரிய முறையில் வழிபாட்டு முறைகள் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயிலில் உள்ள கார்த்திகேய கடவுள் எலும்பு வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.