உடலில் இருக்கும் செல்கள் இரண்டாக பிரியும் போது தசைகள், நரம்புகள் இளமையாகவே இருக்கும். ஆனால் வயதாகும் போது செல்கள் பிளக்கும் வேகம் குறைந்து, முதுமை தோற்றம் ஏற்படுகிறது. திராட்சை விதைகளில் 'புரோசையானிடின் சி1' என்ற வேதிப்பொருள் செல்களின் இளமைத் தன்மையை நீட்டிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வயதான எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் அவற்றின் செல்கள் புரோசையானிடினால் தூண்டப்பட்டு புத்துணர்ச்சியுடன் இருப்பது தெரியவந்தது.