திருச்சி: பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அறிவிப்பு

54பார்த்தது
திருச்சி: பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை, மாணவர்கள் அமரும் அளவிற்கு சீரமைத்த பின்னரே திறக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி