விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் அமர்ந்தபடியே பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசிய நிலையில், கடும் ஆத்திரமடைந்த மக்கள் அமைச்சர் மீது சேற்றை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் பழனி மீதும் சேற்றை வீசியுள்ளனர். தொடர்ந்து காரில் இருந்து இறங்கி மக்களின் குறைகளை கேட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.