திருச்சி மாடு திருடிய நபர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
திருவரம்பூர் அருகே காட்டு எல்லகுடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் மாடுகளை புல் மேய்வதற்காக கட்டிப்போட்டு விட்டு வந்திருந்தார். மாலை சென்று பார்த்தபொழுது மாடு ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் இவரது மாட்டை திருடி புதுக்கோட்டையில் விற்பனைக்காக வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து கணேஷ் நகர் ஒன்பதாவது தெருவில் மாட்டை திருடி வைத்திருந்த சக்திவேலிடம் இருந்து மாட்டை மீட்ட சந்திரசேகரன் அவரையும் அழைத்துவந்து திருவரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.