சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி, உலகையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. HMPV (Human Metapneumo Virus) என்ற சுவாச நோய் அங்கு வேகமாக பரவி வருகிறது. கோவிட்-19 அறிகுறிகளைப் போலவே இதற்கும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதித்த நோயாளிகள் மருத்துவமனைகளில் வரிசையில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், சீனாவில் உள்ள பல மருத்துவமனைகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட் -19 நோயாளிகளால் நிரம்பியுள்ளன.