தினமும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் குளிக்கும் பழக்கம் இருப்பவர்கள் உலர்ந்த ஆடைகளை அணிந்து தூங்கச் செல்ல வேண்டும். ஈரத்துடன் அப்படியே படுக்கைக்குச் சென்றால், சருமப் பிரச்சனைகள் வரலாம். குளித்தவுடன் உடலில் உள்ள ஈரத்தை துடைக்காமல் அப்படியே தூங்குவதும் முற்றிலும் தவறு. இரவில் தூங்கச் செல்லும் முன் சிகரெட் புகைக்கவோ, மது அருந்தவோ கூடாது. காஃபி, டீ அருந்தவும் கூடாது. காஃபி, டீயெல்லாம் அருந்த விரும்பினால் மாலை 5 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.