ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பும்ரா மற்றும் பயிற்சியாளர் கம்பீருடன் இணைந்து ரோஹித் சர்மா சிட்னி மைதானத்தை பார்வையிடும் வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனால், நாளைய போட்டியில் ரோஹித் விளையாடுவாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.