மனைவியின் அந்தரங்க வீடியோ.. கணவனுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

52பார்த்தது
மனைவியின் அந்தரங்க வீடியோ.. கணவனுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்
திருமணம் என்பது, ஒரு கணவருக்கு உரிமையையோ அல்லது அவரது மனைவியின் மீதான கட்டுப்பாட்டையோ வழங்காது என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மனைவியின் அந்தரங்க வீடியோக்களை அவரது அனுமதியின்றி ரகசியமாக பதிவுசெய்த விவகாரத்தில் தன்னை விடுவிக்கும்படி கணவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், "மனைவி என்பவர் கணவரின் நீட்சி அல்ல. அவருக்கும் தனிப்பட்ட உரிமைகள் உள்ளன" என்று அவர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி