வேலை-வாழ்க்கை சமநிலை குறித்து தொழிலதிபர் கெளதம் அதானியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,”ஒருவர் தனது குடும்பத்துடன் குறைந்தது நான்கு மணிநேரம் செலவிடுவது நல்லது. உங்கள் வேலை-வாழ்க்கை சமநிலையை என் மீது திணிக்கக்கூடாது. எனது வேலை-வாழ்க்கை சமநிலையை உங்கள் மீது சுமத்தவும் கூடாது. குடும்பத்தினருடன் நீங்கள் 8 மணி நேரத்தை செலவிட்டால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.